தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

By

Published : May 22, 2020, 8:56 PM IST

15 ஆயிரத்தை நோக்கிய நகரும் கரோனா பாதிப்பு இன்றைய (மே 22) நிலவரம் என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 786 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

காவல்துறை அவரச அழைப்பு எண்கள் தற்காலிகமாக மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அவசர தேவைக்காக அழைக்கும் காவல்துறையின் எண்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை!

கோண்டா: நிதி நெருக்கடியில் சிக்கிய குடிபெயர்ந்த தொழிலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூனையை தூக்குமேடைக்கு ஏற்றிய டிக் டாக் விரும்பி; சிறையில் உணவளித்த போலீஸ்!

டிக் டாக் மோகத்தால் தினமும் அதன் மூலம் கிளம்பும் வைரல் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இந்தச் சூழலில் இளைஞர் ஒருவர் தான் வளர்த்து வந்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு டிக் டாக் எடுத்த காணொலி சமூக வலைதள வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவுப் பகுதியில் பாம்பை பிடித்து, துண்டு துண்டாக வெட்டி பிடாரி அம்மன் கோயிலில் உள்ள வேலில் ஒருவர் குத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை பிரச்னையால் தற்கொலை; சகோதரிக்காக ட்விட்டரில் நீதி கேட்கும் பெண்!

லக்னோ: வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சகோதரிக்கு #JusticeForKirti என்ற ஹேஷ்டாக் மூலம் ட்விட்டர் வலைதளத்தில் அவரது தங்கை நீதி கோரியுள்ளார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோயில் அர்ச்சகர் கைது

சென்னை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோயில் அர்ச்சகரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜூலையில் வெளியாகும் 'இடம் பொருள் ஏவல்'? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று வலம் வரும் செய்திக்கு தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைத்தது ஐசிசி?

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரை குறித்த நேரத்தில் நடத்த முடியாது என்பதால், அத்தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பை பாராட்டித் தள்ளும் தலைமை அதிகாரிகள்!

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் ரிசர்வ் வங்கி அறிவித்த அறிவிப்புகள் இருந்தன என டாடா நிறுவனமும், பாரத ஸ்டேட் வங்கி தலைமை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details