இதுகுறித்து சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், மாற்றுதல், பெயர் நீக்குதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன. பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு 9 லட்சத்து 48 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
படிவம் 6ஐ பயன்படுத்தி 2 லட்சத்து 44 ஆயிரத்து 808 நபர்கள் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும், படிவம் 6ஏ வின் மூலம் வெளிநாட்டில் வாழ்பவர்கள் 93 பேர் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், பெயர் நீக்குதல், திருத்தம் செய்தல், சட்டப்பேரவை தொகுதிக்கு முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு 9 லட்சத்து 48 ஆயிரத்து 612 வாக்காளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.