தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து தற்போது 9 ஐ.பி.எஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By

Published : May 10, 2021, 6:20 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை காவல் ஆணையர், உளவுத்துறை ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று (மே.10) ஒன்பது ஐ.பி.எஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அலுவலர்களின் பெயர்கள், பணியிட பொறுப்புகளை கீழே காணலாம்.

1. ஷகில் அக்தர் - சிபிசிஐடி டிஜிபி

2. கந்தசாமி - லஞ்சம் ஒழிப்புத் துறை டிஜிபி

3.ரவி - ஏடிஜிபி அட்மின்

4.ஆசியம்மாள் - உளவுத்துறை டிஐஜி

5.அரவிந்தன் - சி.பி.சி ஐடி எஸ்.பி

6.சரவணன் - ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு எஸ்.பி

7. திருநாவுக்கரசு - சிபிசிஐடி விங்க் 1

8.ஈஸ்வர மூர்த்தி - உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜி

9.சுவாமி நாதன் - சிபிசிஐடி விங்க் 2 .

இதையும் படிங்க :தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details