சென்னை:மாண்டஸ் புயல் (Mandous Cyclone) சென்னை அருகே கரையைக் கடந்தபோது நேற்று சென்னை விமான நிலையம் வந்த 6 விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் மேலும், அப்புயலின் தாக்கம் காரணமாக இன்று (டிச.10) சென்னை வந்த 3 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
அதன்படி, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.