தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9am - indraya mukkiya News

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9am
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9am

By

Published : Jun 9, 2020, 9:31 AM IST

1.பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

2.பொதுத்தேர்வு நடத்துவது சரியா? மாநில அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

கரோனாவால் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலமே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும்போது, தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு நடத்துவது சரியா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

3.'காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி...!' - எடப்பாடி மீது விமர்சன கணைகள் தொடுக்கும் உதயநிதி

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமியை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

4.மின்சக்தித் துறையில் இந்தியா- டென்மார்க் ஒப்பந்தம்

மின்சக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், டென்மார்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

5.சாதி வெறியாட்டம்: காதலை எதிர்த்துக் கத்தி பிடித்த 17 வயது சிறுவன்!

கேரளா மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தனது சகோதரியை காதலிப்பது பிடிக்காமல் கத்தியால் குத்திய சிறுவனைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

6.'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'

கரோனா வைரசுக்குத் (தீநுண்மி) தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயன்றுவருவதாக அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7.நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்த ரவுடி கும்பல் - பிரிட்டன் பிரதமர் குற்றச்சாட்டு

நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததற்கு அப்போராட்டத்தில் ரவுடி கும்பல் நுழைந்ததே காரணம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

8.'எதையும் பிளான் பண்ணி பண்ணணும்'- படப்பிடிப்புக்குத் தயாராகும் அக்ஷய் குமாரின் 'பெல் பாட்டம்'

மகாராஷ்டிர மாநிலத்தில் திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிவரும் 'பெல் பாட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கியுள்ளன‌.

9.ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!

நடிகை இலியானா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

10."முடிந்தவற்றைப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை " - உன்முக் சந்த்

தன்னை ஒரு காலத்தில் விராட் கோலியுடன் ஒப்பிட்டுக் கூறினர், ஆனால் முடிந்தவற்றைப் பேசுவதினால் எந்தப் பயனும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details