தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரித்து உள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள், வெண்டிலேட்டர் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்தத் தீவிர நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
டெல்லியிலிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன! - 888 kilo medical equpiments import to chennai
சென்னை: இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில், டெல்லியிலிருந்து 888 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தடைந்தன.
மருத்துவ உபகரணங்கள்
அதன்படி நேற்று(மே.18), இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில், கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
மொத்தமாக 888 கிலோ மருத்துவ உபகரணங்கள், 35 பாா்சல்களில் கொண்டு வரப்பட்டன. விமான நிலைய அலுவலர்கள் அவற்றை அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.