முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தமிழ் உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் சினிமாவிலும் பல இயக்குநர்கள் அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். அதில் இயக்குநர் சீனு ராமசாமியும் ஒருவர். இவர் விஜய் சேதுபதியை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்தநிலையில், அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி இன்று சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பது போல தொடர்ந்து செய்திகள் சித்தரிக்கப்படுகிறது. நன்றி வணக்கம் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு என்ன பொருள் என்று தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, அது ஒரு நல்ல கதாபாத்திரம் என்று நான் தேர்வு செய்தேன். அதன் பிறகு தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அரசியல் விமர்சனம் இருப்பதாகவும் தெரிந்து கொண்ட போது, தயாரிப்பு நிறுவனம் இதை புரிந்துகொண்டு விலகிச் சென்றார்கள். அதனால், அவர்களுக்கு நன்றி வணக்கம் என்று கூறினேன் என்றார்.
ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் விஜய் சேதுபதி வைத்திருக்கும் அன்பை இதில் புரிந்து கொள்ளலாம். ஆனால், நான் விஜய் சேதுபதியை பற்றி தவறாக பேசியதாக வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் தொடர்ந்து ஆபாசமாக தவறாக பேசி வருகிறார்கள்.
நன்றி வணக்கம் என்று நான் ட்விட்டரில் பதிவிட்டபோது அதற்கு கீழே ஆபாசமாக எதிர்வினைகள் வந்தது. அதனால், உடனே அதனை விளக்கி விட்டேன். விஜயதசமி அன்று விஜய் சேதுபதியுடைய அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன்.