சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை இன்று (ஜூலை 28) நேரில் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
திரைப்பட இயக்குநருமான பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில், "திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு குறைந்து திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டியுள்ளதால் சினிமா துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 விழுக்காடு கேளிக்கை வரியினை முழுவதுமாக நீக்க வேண்டும்.
தனியாக உள்ள சிறிய திரையரங்குகளை மினி ப்ளெக்ஸ் (அ) மல்டி காம்ப்ளெக்ஸாக மாற்றுவதற்குப் பெறப்படும் அனுமதியினை எளிதாக்க வேண்டும். திரையரங்குகளில் தற்பொழுது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், ப்ரோஜெக்டர் இயக்குபவர்களுக்கு வேலையே இல்லாத சூழ்நிலையில் திரையரங்குகளில் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்ற முறையை முற்றிலும் நீக்க வேண்டும்.