சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார் (S.Sathikumar), கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். நிரந்தர நீதிபதிகள் 9 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் இன்று (ஜூன்4) நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.
நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன்- மனைவி ஆவார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக இவர்கள் 9 பேரும் பதவியேற்றனர். நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுள்ள உள்ள 8 பேரும், மாவட்ட நீதிபதியாக இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்கள்.
இன்று பதவியேற்றுள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளனர். மேலும் நீதிபதி சத்திகுமார் வேறு ஒரு நாளில் பதவி ஏற்பார். இதிலிருந்து தற்போது மொத்தம் சென்னை உயர் நீதிமன்றதில் நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக உள்ளது.
இதையும் படிங்க: ”சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு” அமைச்சர் மா. சுப்பிரமணியன்