தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

7am-news-update
7am-news-update

By

Published : May 17, 2020, 6:42 AM IST

  • ‘தனியார் பங்களிப்பின் மூலம் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - மயில்சாமி அண்ணாதுரை

சென்னை: இஸ்ரோ அமைப்பில் தனியார் பங்களிப்பின் மூலம் இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும், இது வரவேற்க வேண்டிய அறிவிப்பு எனவும் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

  • அம்பான் சூறாவளி: கப்பல்கள், மீன்பிடி படகுகள் துறைமுகத்திற்கு திரும்ப வலியுறுத்தல்

அம்பான் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களின் கடல்பகுதிகளை சேர்ந்த கப்பல்கள், மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்குத் திருப்ப இந்திய கடலோர காவல் படை வலியுறுத்தியுள்ளது.

  • இறைச்சி சந்தைகளைச் சீனா ஒழுங்குபடுத்த வேண்டும் - முன்னாள் ஐநா சுற்றுச்சூழல் திட்ட செயல் தலைவர்

டெல்லி : சீனாவில் உள்ள இறைச்சி சந்தைகளை அந்நாட்டு அரசு ஒரு ஒழுங்குமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஐநா சுற்றுச்சூழல் திட்ட செயல் தலைவர் எரிக் சோலிஹீம் ஈடிவி பாரத் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.

  • N-95, அறுவை சிகிச்சை முகக் கவசங்களைத் தவிர மற்ற முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யலாம்- மத்திய அரசு

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவ சம்பத்தப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், N-95, அறுவை சிகிச்சை முகக் கவசங்களைத் தவிர மற்ற மருத்துவ பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • நிதியமைச்சரின் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு ஒன்றுமில்லை - ப. சிதம்பரம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

  • ‘அனைவருக்கும் உணவு வழங்க அரசு செயல்படுகிறது’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: ஒருவருக்கு கூட உணவோ , அத்தியாவசியப் பொருள்களோ கிடைக்காத நிலை இல்லை என்பதை உருவாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • தனது இறந்த மகனை காண முடியாமல் கதறிய புலம்பெயர்ந்த தொழிலாளி

காஜியாபாத்: தனது எட்டு மாத மகன் பீகாரில் உள்ள தனது கிராமத்தில் இறந்து விட்டான் என்பதை அறிந்து வீடு திரும்ப விரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் நடைபயணம் மேற்கொண்டபோது அவரை டெல்லி-உ.பி. எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். என்ன செய்யவதென்று அறியாமல் அந்த தொழிலாளி மூன்று நாள்கள் சரியான உணவு இன்றி ஒரு பாலத்தின் கீழ் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • பிரதமரை கேப்டனாக நியமித்து ரமீஸ் ராஜா உருவாக்கிய இந்தியா - பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நியமித்துள்ளார்.

  • ஊடரங்கு தளர்வு: விமான போக்குவரத்தை தொடங்குகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: கரோனா பாதிப்பால் விமான சேவை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக விமான போக்குவரத்தை தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

  • உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்

GOQii நிறுவனம் தனது வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலனை 3,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதில் உடற்சூட்டை அறிந்துகொள்ளும் உணரிகள் இருப்பதால் கரோனா காலங்களில் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details