தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்பு விமானத்திலும் அரங்கேறும் கடத்தல்... உள்ளாடைக்குள் சிக்கிய 758 கிராம் தங்க கட்டிகள்! - gold smuggling from dubai to chennai

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.39.5 லட்சம் மதிப்புடைய 758 கிராம் தங்கத்தை விமான சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ub
dun

By

Published : Oct 4, 2020, 7:00 PM IST

கரோனா தொற்றால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மக்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானங்கள் அனுப்பட்டு மத்திய அரசு மீட்டு வருகிறது.

அதன்படி இன்று காலை, துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு மீட்பு விமானங்கள் வந்தன. அதில் வந்த 196 பயணிகளையும் விமான சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சோ்ந்த காஜாமொய்தீன் (33), முகமது சாத்கான் (21), அப்துல் ஹமீது (39), திருச்சியை சோ்ந்த ஜலீல் முகமது அலி (33) ஆகிய நால்வரும் முரண்பாடாக பதில் அளித்துள்ளனர்.

விமான டிக்கெட்டுக்கு காசு இல்லாமல் வேறு யாரோ வாங்கி கொடுத்தார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகப்பட்ட அலுவலர்கள் அவரது உடமைகளை சோதனையிட்டனர். ஆனால், அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளையும், கால்களில் அணிந்திருந்த ஷூ சாக்ஸ்களில் தங்க செயின்களையும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 758 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.39.5 லட்சம் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், இவா்களுக்கு விமான டிக்கெட்கள் எடுத்துக்கொடுத்து கடத்தல் தங்கத்தை கொடுத்து அனுப்பியது யாா்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details