தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75,090 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் எரிப்பு - சென்னை மாநகராட்சி - 75090 kg sanitary napkin and diaper waste

சென்னை மாநகராட்சியில் இதுவரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 75,090 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் எரியூட்டப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க தனித்தனியாக தருமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 19, 2023, 10:15 AM IST

சென்னை:சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 75,090 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை (Sanitary Napkins & Diapers) உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை (Households) தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மட்கும் உறையில் (Separate Bio-Degradable Covers) போட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை பெருநகர மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் மண்டலங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் இதற்காக அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரை 75,090 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு (Incinerator Plants) எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது.

இதில், அதிகப்பட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 23,140 கி.கி, வளசரவாக்கம் மண்டலத்தில் 10,960 கி.கி மற்றும் திருவெற்றியூர் மண்டலத்தில் 10,450கி.கி அளவில் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டுள்ளன

இதையும் படிங்க: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டத்திருத்தம்: உயர்நீதிமன்றம் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details