தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மகளிர் வாகன பேரணி - மகளிர் வாகன பேரணி

75-ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் பாஜக மகளிர் அணி சார்பில் தேசியக் கொடி வாகன பேரணி நடைபெற்றது.

Etv Bharat  மகளிர் வாகன பேரணி
Etv Bharat மகளிர் வாகன பேரணி

By

Published : Aug 6, 2022, 5:32 PM IST

சென்னை: 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பாஜக மகளிர் அணி சார்பில் பட்டினப்பாக்கம் முதல் திருவிடந்தை வரை தேசியக் கொடி ஏந்தி மகளிர் வாகன பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுதோரும் தேசிய கொடி மற்றும் அனைவரது அலைபேசியில் தேசிய கொடியின் படங்களை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை 10 நாள்களுக்கு முன்பே பாஜகவினர் ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று (ஆக.06) பேரணி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் பேரணியை வழிநடத்தினார்.

இதையும் படிங்க:பாஜகவினரை தடியால் தாக்கிய திரிணாமுல் எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details