தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 7:53 PM IST

ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க 75% நோட்டு புத்தகங்கள் தயார்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச நோட்டு புத்தகங்களில் 75 சதவீதம் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு
அரசு பள்ளி மாணவர்களுக்கு

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் இந்த கல்வியாண்டில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி அளிப்பதற்கு 2 வரி நோட்டு, 4 வரி நோட்டு, கட்டுரைப் பயிற்சி ஏடு, கணிதம் பாடத்திற்கு வடிவியியல் நோட்டு, கிராப் நோட் ஆகியவை பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படுகிறது. இந்த நோட்டுப் புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை மாணவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்ப மாற்றி வழங்கப்படும்.

தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு இந்தாண்டு சுமார் 3 கோடி நோட்டு புத்தகங்கள் அச்சிட்டு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணை வழங்கியது. அதனைத் தாெடர்ந்து தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் நோட்டு புத்தகங்களை 75 சதவீதம் அளவிற்கு தயார் செய்து மாவட்ட கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ளது. மீதமுள்ள நோட்டுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் நியமனம் செய்ய கோரி போராட்டம் - தற்காலிக ஆசிரியர் நியமனம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details