தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சாதாரண பதவியிடங்களுக்காக 74,416 வேட்புமனுக்கள்’ - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்காக, 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

urban local election nominations urban local election nomination general election posts for urban local election general election posts சாதாரண பதவியிடங்களுக்காக வேட்பு மனுக்கள் வேட்பு மனுக்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

By

Published : Feb 5, 2022, 6:44 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை, கடந்த 26ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், வருகிற பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள், கடந்த 26ஆம் தேதி தொடங்கி, 4ஆம் தேதிவரை பெறப்பட்டன.

இதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்காக, 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட வேட்புமனுக்களின் மொத்த விவரம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர் -14,701

நகராட்சி வார்டு உறுப்பினர் - 23,354

பேரூராட்சி வார்டு உறுப்பினர் - 36,361

மொத்த வேட்புமனு எண்ணிக்கை - 74,416

இன்று (பிப்ரவரி 5) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுவருகிறது. மேலும் வருகின்ற 7ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெறுதல், வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையம், வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படு, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா ரிப்பீட்டு - விரைவில் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details