தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 74 ஆயிரத்து 622 பேருக்கு கரோனா தொற்று! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622ஆக உயர்ந்துள்ளது.

corona
corona

By

Published : Jun 26, 2020, 9:32 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இன்று (ஜூன் 26) தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 3ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் ஆயிரத்து 956 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 1,956
2 செங்கல்பட்டு 232
3 திருவள்ளூர் 177
4 மதுரை 194
5 வேலூர் 149
6 சேலம் 111
7 காஞ்சிபுரம் 90
8 ராமநாதபுரம் 72
9 திருவண்ணாமலை 70
10 கள்ளக்குறிச்சி 58
11 ராணிப்பேட்டை 53
12 கோயம்புத்தூர் 43
13 தேனி 40
14 தூத்துக்குடி 37
15 விருதுநகர் 33

இதையும் படிங்க:'சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தியுள்ளது'

ABOUT THE AUTHOR

...view details