சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 73 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 20 ஆயிரத்து 3 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 73 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரத்து 742 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 829 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. மேலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 488 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த நிலையில், மேலும் 32 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 316 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 44 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும், திருவள்ளூரில் மூன்று நபர்களுக்கும் திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் புதிதாகப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிதாக கட்டிய வீட்டுக்கு நரேந்திர மோடி பெயர்!