நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்வரி தணிக்கை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆணையகத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையாளர் ரவீந்திரநாத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ' ஜிஎஸ்டி மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 1.40 கோடி வரி செலுத்துவோரில் 40 கோடி பேர் ஜிஎஸ்டி ரிட்டன் செய்துள்ளனர். இதிலிருந்து ரூ.23 லட்சம் கோடி வரி வசூல் ஆகியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் ஜிஎஸ்டி ஆணையரகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.