சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 420 நபர்களுக்கு கரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 711 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 36 லட்சத்து 42 ஆயிரத்து 248 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 27 லட்சத்து 29 ஆயிரத்து 61 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 98 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 759 பேர் இன்று (டிச.3) வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த ஐந்து பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 513ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,58,382
கோயம்புத்தூர் - 2,50,550
செங்கல்பட்டு - 1,73,962
திருவள்ளூர் - 1,20,286
ஈரோடு - 1,06,492
சேலம் - 1,01,479
திருப்பூர் - 97,338
திருச்சிராப்பள்ளி - 78,495
மதுரை - 75,538
காஞ்சிபுரம் - 75,655
தஞ்சாவூர் - 76,141
கடலூர் - 64,416
கன்னியாகுமரி - 62,808
தூத்துக்குடி - 56,500
திருவண்ணாமலை - 55,206
நாமக்கல் - 53,629
வேலூர் - 50,230
திருநெல்வேலி - 49,668