சென்னை: திருவொற்றியூர் மாநகராட்சிக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் ரூ. 82 லட்சம் செலவில் கட்டப்பட்ட டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருவொற்றியூர் மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.82 லட்சம் செலவில் இந்த டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை டயாலிசிஸ் செய்ய மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் நிலையில் நடுத்தரம், ஏழை, எளியோர் பயன்படும் வகையில் இந்த டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் இணைந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர், மாதவரம் சுதர்சனம், திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'டேக்' செய்த ஜெர்மன் வாழ் தமிழ் பெண்.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்..