துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (ஜன.25) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனார் முகமது ராவுத்தர் (50), இப்ராகீம் (46) ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சென்னை வந்த மீட்பு விமானத்தில் தங்கக் கடத்தல்: இருவர் கைது - gold smuggling
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த தனியாா் மீட்பு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 705 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
தங்கக் கடத்தல்
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இருவரின் உள்ளாடைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 705 கிராம் தங்கம், சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 40 லட்ச ரூபாயாகும். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 திரும்பப் பெறும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி