சென்னை:இதுதெடார்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 702 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும். கரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உரிய விதிகளை பின்பற்றி குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் குளிர் சாதன பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் அவை இயக்கப்படவுள்ளன.
சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படு இருக்கின்றன.