சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் சாதிக் (30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் உடமைகளைச் சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் இரண்டு பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.