சென்னை: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட கடற்கரை சாலையில் இன்று(ஜன.22) காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகே போலீசார் சென்றபோது அவர்கள் ஓட ஆரம்பித்தனர்.
அவர்களில் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் ஏதேனும் இருக்கும் என்ற சந்தேகத்தில் சோதனை செய்த போலீசாருக்கு பையை திறந்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.