தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 1, 2021, 7:11 PM IST

15,000 மியான்மர் மக்கள் இந்தியாவிற்குள் குடிபெயர்வு - ஐநா தலைவர்

உள்நாட்டு மோதல் காரணமாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த 15 ஆயிரம் மக்கள் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்துள்ளதாக ஐநா சபைத் தலைவர் கூறியுள்ளார்.

கரோனா காலத்திலும் ரத்த தான முகாம் மூலம் 1,18,363 யூனிட் ரத்தம் சேகரிப்பு!

அரசு ரத்த வங்கிகள் மூலம் ஏப்ரல் 21 முதல் ஆகஸ்ட் 21 வரை 778 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 1,18,363 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

Video In: பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் மாணவர்கள்

பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன்பு அநாகரிகமாக நடந்துகொள்ளும் மாணவர்களின் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

'நமது வெற்றி நமக்கானது அல்ல; சமூகத்திற்கானது' - மு.க. ஸ்டாலின்

'நமது வெற்றி நமக்கானது அல்ல; சமூகத்திற்கானது' - மு.க. ஸ்டாலின்

'ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் பேசிவரும் எம்பிக்கள்'

ஜிஎஸ்டி (சரக்கு - சேவை வரி) என்றால் என்னவென்று தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

'காதலை மறுத்த பெண்' கல்லூரி வளாகத்தில் கொடூரக்கொலை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு என்ற இளைஞர் காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாகக் கொலைசெய்துள்ளார்.

தாய்ப்பால் புகட்டுவது தாயின் அடிப்படை உரிமை - வித்தியாசமான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வித்தியாசமான வழக்கில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது தாயின் அடிப்படை உரிமை என்றும், இந்த உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வாழ்வதற்கான அடிப்படை உரிமை ஆகும் எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

'நடிகர் திலகம் திரை ரசனையின் பொற்காலம்'

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்து ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார் கமல் ஹாசன்.

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி - ஓ. பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details