தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 7 மணி செய்தி
ஈடிவி பாரத் 7 மணி செய்தி

By

Published : Jul 23, 2020, 7:08 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 6,472 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

முதலமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற கே.பி.முனுசாமி

சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுகொண்ட கே.பி. முனுசாமி , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி!

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டத்தில் கேள்விக்குறியான தகுந்த இடைவெளி!

சென்னை: இன்று (ஜூலை 23) நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தகுந்த இடைவெளிகள் இல்லாமல் இருந்ததால், கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ எமர்ஜென்ஸி: இ-பாஸ் பெற்ற ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு செல்ல இன்று (ஜூலை23) இ-பாஸ் பெற்றுள்ளார். அந்த இ-பாஸில் மருத்துவ எம்ர்ஜென்ஸி என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் எங்கெங்கு நாளை மின்தடை?

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக மாடம்பாக்கம் பகுதியில் உள்ள சில இடங்களில் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கரோனாவில் இருந்து மீண்ட அமிதாப்... பொய் என அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று கூறப்பட்ட செய்தி தவறானது என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா ஸ்பைஸ் ஜெட் விமான சேவை

மும்பை: இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்மார்ட் இந்தியா ஃபிளிப்கார்ட் வசம்: ஜியோ மார்ட்டுடன் போட்டி போட திட்டம்!

ஃபிளிப்கார்ட் நிறுவனம், வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!

பெய்ஜிங்: அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், வூஹானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details