தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7-pm-news
7-pm-news

By

Published : Jul 19, 2020, 7:12 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 4,979 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 4,979 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் நள்ளிரவில் தொடரும் பைக் ரேஸ் - 6 இளைஞர்கள் கைது

சென்னை: நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் தவித்த தம்பதி: உதவிய காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி: நெல்லையில் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல பெட்ரோல் இல்லாமல் தவித்த தம்பதிக்கு தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் உதவினார்.

'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோருக்கு பிளாஸ்மா தானம் கொடுக்க முன் வர வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

ரயில்களை தனியார்மயமாக்குவது யாருக்கு நன்மை பயக்கும்?

ரயில்வேயை நவீனமயமாக்குவது மற்றும் விரிவாக்கம் செய்வது என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. இதுவரை பல குழுக்கள் இது தொடர்பாக செயல்பட்டுள்ளன.

குழந்தைகள் மீதான வன்முறைகளை சட்டம் தடுக்குமா?

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் என்ற வாதம் ஏற்கக்கூடியதே. ஆனால் எல்லா வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்படுகின்றனவா? காலதாமதமான நீதியினால் யார் பலன் அடைகிறார்கள்.

'சுஷாந்த் மனவலியில் இருந்தது எனக்கு தெரியும்' - ‘தில் பேச்சரா’ இயக்குநர்!

நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்து தில் பேச்சரா பட இயக்குநர் முகேஷ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனமழையால் சரிந்த வீடு: வைரல் காணொலி

டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அண்ணா நகர் குடிசைப் பகுதியில் உள்ள வீடு ஒன்று சரிந்து விழுந்தது.

ஆயிரம் ரூபாய்க்காக நேபாளியாக நடித்த இளைஞர் - வைரலான வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!

வாரணாசி: நேபாள நபர் ஒருவருக்கு மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கூற கட்டாயப்படுத்துவது போன்ற வீடியோவில் உள்ள நபர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்தியர்தான் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரை பேர ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அபிஷேக் மனு சிங்வி!

டெல்லி: ராஜஸ்தான் குதிரை பேர ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details