தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 pm News today
7 pm News today

By

Published : Jun 7, 2020, 7:03 PM IST

1.சென்னையில் 20 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2.நடிகர் அர்ஜுனின் மருமகன் மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு: பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் மருமகன் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

3.ஷாபாஸ் மானநஷ்ட வழக்கு: இம்ரான் கானுக்கு நோட்டீஸ்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஷாபாஸ் ஷரிஃப் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 10ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.'இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா மதிப்பளிக்கவில்லை'

வாஷிங்டன்: இந்திய-சீன இடையே தற்போது நிலவிவரும் எல்லைப் பிரச்னை, எல்லைப் பகுதிகளில் அமைதியைக் காக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா சிறிதும் மதிப்பளிக்காததைக் காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உருவாக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

5.ஆரோக்கியத்தை பாதுகாக்க மருத்துவர் சொல்லும் மூலிகை டீ!

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு டீ தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் ஆயுர்வேதத்தில் உதவி பேராசிரியரான டாக்டர் எஸ். யாஸ்மின், டீ வகைகளின் ஆரோக்கியம் குறித்து நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

6.நிலுவை பங்கு தொகைகளை திருப்பிச் செலுத்தும் தமிழ்நாடு அரசு

சென்னை: 2020ஆம் ஆண்டுக்குரிய 8.16 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பங்குகளின் நிலுவைத் தொகை இன்றும் (ஜூன் 7) வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

7. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இஸ்ரோ, ஏரிஸ்

விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு, வானியற்பியல் போன்ற துறைகளுக்கான ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவும் (ISRO), ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமும் (ARIES- ஏரிஸ்) கையெழுத்திட்டன.

8.கரோனா பாதிப்பு எண்ணிக்கையை நீக்கிய பிரேசில்!

பிரேசிலியா: பிரேசில் அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கையை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

9.தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

சென்னை: தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

10.பலத்த காற்று வீசியதால் இன்டிகோ மீது மோதிய ஸ்பைஸ் ஜெட்!

மும்பை: விமான நிலையத்தில் பலத்த காற்று வீசியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஒரு பகுதி இன்டிகோ மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details