சென்னை:இதுதொடர்பாக உள்துறைச்செயலர் பிறப்பித்த உத்தரவில், “உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் அமலாக்கப்பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.