தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் ஓய்வு - சென்னை காவல் ஆணையர் உத்தரவு - காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் ஓய்வு

சென்னை: இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் ஓய்வளிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

police
police

By

Published : Jun 1, 2020, 11:22 PM IST

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினரும் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதுவரை, 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் ஏழு முதல் 10 நாள்கள் வரையில் ஓய்வு அளிக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இந்த ஓய்வை எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஒரு காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டினருக்கு ஓய்வளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 100 பேர் பணியில் இருக்குமிடத்தில் 10 பேருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையரின் இந்த அறிவிப்பு காவல் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுழற்சி முறையில் அனைத்து காவல் துறையினரும் பயன் பெறும் வகையில் ஓய்வை பிரித்து வழங்க வேண்டும் என்று உயர் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே 55 வயதுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதபோல் தற்போது, சுழற்சி முறையில் காவல் துறையினருக்கு ஓய்வு வழங்கும் முடிவையும் காவல் துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:நிதி ஆயோக்கை விட்டுவைக்காத கரோனா!

ABOUT THE AUTHOR

...view details