தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 3 லட்சம்;10 மாதங்களில் 7 கோடி.. சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு! - Concession for Metro commuters

chennai metro train: தொடர் விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை தினத்தையொட்டி, அக்டோபர் 20-ஆம் தேதி அன்று மட்டும் மெட்ரோ ரயிலில் நேற்று மட்டும், 3.60 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

7 crore people traveling in the last 10 months in Chennai Metro and passenger continuously increasing
சென்னை மெட்ரோவில் பயணம் மேற்கொள்பவர்கள் அதிகரிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 4:32 PM IST

சென்னை: அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில் சென்னை சென்டரல் முதல் பரங்கி மலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் என இரண்டு வழித்தடங்களில் இயக்கபட்டு வருகிறது.

மேலும், இந்த வழித்தடங்களில், தினமும், 2 லட்சம் பயணிகளுக்கு மேல் பயணித்து வருகின்றனர். மேலும், மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் பயண நேரம் குறைவதால் தினந்தோறும், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 7 கோடிய 51 லட்சத்து 67 ஆயிரத்து 277 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மெட்ரோ பயணர்கள்:நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும், மே மாதத்தில் 72 லட்சத்து 68 ஆயிரத்து 7 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74 லட்சத்து 6ஆயிரத்து 876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பயணிகளும், அக்டோபர் மாதத்தில் 85 லட்சத்து 50 ஆயிரத்து 30 பயணிகளும் என கடந்த 10 மாதத்தில் 7 கோடியே 51 லட்சத்து 67 ஆயிரத்து 277 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக அக்டோபர் 20-ஆம் தேதி அன்று 3 லட்சத்து 60 ஆயிரத்து 743 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34 லட்சத்து 20 ஆயிரத்து 155 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 42 லட்சத்து 16 ஆயிரத்து 831 பயணிகளும் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், டோக்கன்களை பயன்படுத்தி 2 லட்சத்து 51 ஆயிரத்து 955 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7 ஆயிரத்து 928 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 6 லட்சத்து 53 ஆயிரத்து 161 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் மெட்ரோவில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் Paytm App போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுத்து போட்ட வளிமண்டல சுழற்சி..! தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details