விழுப்புரம்: ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர் 2014ஆம் ஆண்டு காதல் விவகாரத்தில் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட லட்சுமணன், நாகராஜன், வெங்கடேசன், சரண் பாபு, மணி, ஐயப்பன் ஆகிய ஏழு பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
காதல் விவகாரம் - கொலைக்குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை! - கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரத்தில் 2014ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில் நேற்று (ஜூன் 21) விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் இவர்கள் ஏழு பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!