தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடியது சரத்குமார், உதவியது கமலஹாசன், தாய் வரலட்சுமி- கொத்தாக தூக்கிய போலீஸ்! - தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை

சென்னை: தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு கொள்ளை சம்பவத்தில் சிறுவன் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை
தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை

By

Published : Jun 14, 2021, 3:46 AM IST

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த சரண்யா என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 9 ஆம் தேதி இரவு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த 2 செல்போன், அரை கிராம் தங்க கம்மல், ரூ.5 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

அதேபோல் அதே அடுக்குமாடி குடியிருப்பில் 2ஆவது மாடியில் வசித்து வரும் ஜான்சிமேரி என்பவர் வீட்டிலும் 3 செல்போன்கள், 8 கிராம் தங்க நகை, ரூ.7 ஆயிரம் பணத்தை அந்த நபர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக இரண்டு குடும்பத்தினரும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21), சிலம்பரசன் (18), சரத்குமார் (20) மற்றும் சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தோஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 11 குற்ற வழக்குகளும், சரத்குமார் மீது 5 குற்ற வழக்குகளும், சிறுவன் மீது 3 குற்ற வழக்குகளும் இருந்தது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட 4 பேரும் சந்தோஷின் தாயாரான வரலட்சுமி (40) என்பவருடன் சேர்ந்து வீடுகளில் புகுந்து திருடி வந்துள்ளனர். உடனடியாக வரலட்சுமியையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். திருடிய நகைகளை விற்பனை செய்வதற்கு உதவிய தட்சிணாமூர்த்தி (49), கமலஹாசன் (26) ஆகிய 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்து 8 அரை கிராம் தங்க நகை, ரூ.12 ஆயிரம் பணம், 2 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது பெண் உட்பட 6 பேர் புழல் சிறைக்கும், சிறுவன் அரசு காப்பகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: காணாமல் போன 2 சிறுமிகள், மரத்தில் பிணமாகத் தொங்கிய நிலையில் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details