தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'Minority school students-க்கும் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்குக' - சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொழிற்கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

By

Published : Nov 28, 2021, 9:19 PM IST

சென்னை: மொழி, மத சிறுபான்மை பள்ளிகளை நடத்துவோர், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொடங்க நிகழ்ச்சியில் சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரூபி மனோகரன், இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறும் போது, "தமிழ் வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் Minority school students-க்கும் தொழிற்கல்விப்படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனம், மதம், மொழி கடந்து கல்வி சேவை வழங்கும் சிறுபான்மை பள்ளிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெறுப்பு பிரசாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றி, அந்தந்த பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசே கல்வி உதவித்தொகை வழங்கும் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கி உள்ளார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Omicron: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தாக்கும் ஒமைக்ரான் வைரஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details