சென்னை: தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர 4 நாட்களில் 69ஆயிரத்து 618 மாணவர்கள் இன்று (ஜூலை 29) மாலை 5.30 மணி வரையில், பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர 4 நாள்களில் மாலை 5.30 மணி வரையில், 69 ஆயிரத்து 618 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 43 ஆயிரத்து 973 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 31 ஆயிரத்து 276 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு; திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்