சென்னை டி.எம்.எஸ். சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் வீட்டுக் கண்காணிப்பில், 66,131 பேர் உள்ளனர். 253 பேர் அரசு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கண்காணிப்பிலிருந்த 27,416 பேர் 28 நாள் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி! - தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
17:32 April 07
சென்னை:தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுவரை 5,305 பேரின் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அரசின் தீவிர முயற்சியால் இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஏற்கனவே, 11 அரசு மருத்துவமனை, ஆறு தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கருவி உள்ள நிலையில், இன்று ஈரோடு அரசுமருத்துவனை, தனியார் மருத்துவமனையில் பரிசோதனை கருவி புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 69 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 64 வயதுடைய பெண்மணி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததையடுத்து, தற்போது ஏழாக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராமநாதபுரம் கீழக்கரை பெண்மணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 200 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்த அறிவிப்பு - இன்று வெளியாகும்?