சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இன்று (ஜூன் 12) காலை 10 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் 12 ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
மேலும் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் நடப்பாண்டில் தேனி வீரப்பாண்டி, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தலா 40 இடங்கள் என 80 இடங்கள் கூடுதலாக அனுமதிப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 660 என உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு(இளநிலைப் பட்டப்படிப்பு ) தலைவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதி, “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளது.