தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்ஜாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்! - gold smuggling at sharjah to chennai fight

சென்னை: சார்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.12 கிலோ தங்கம், ஐபோன்கள், கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

gold smughling
சென்னை

By

Published : Mar 11, 2021, 8:25 PM IST

சார்ஜாவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் ஒன்று இன்று (மார்ச்.11) அதிகாலை சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாமுகமது(42) என்பவரை, தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.

அந்த சோதனையில், அவரது உள்ளாடைக்குள் ரூ.52 லட்சம் மதிப்புடைய 1.12 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், அவரின் சூட்கேஷ், பைகளைச் சோதனை செய்ததில் ஐபோன்கள், கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு சிகரெட்கள் சிக்கியுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.13.7 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, ராஜாமுகமதுவிடமிருந்து, 65 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'இதுவெறும் ட்ரெய்லர்தான்' - முகேஷ் அம்பானிக்கு குறுஞ்செய்தி

ABOUT THE AUTHOR

...view details