இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பி.இ, பி.டெக் படிப்பில் சேர 62,800 பேர் விண்ணப்பம்! - be, b.tech
சென்னை: பி.இ, பி.டெக். படிப்பில் சேர 62,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தற்போது மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதுவரை 62,800 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்பப்பாடம் மற்றும் கல்லூரி தேர்வு ஆகிய அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஸ்கிரீன் ஷாட் மூலம் வழிகாட்டுதல்கள் மற்றும் காலஅட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை 1.90 லட்சம் மாணவர்கள் இணைதளத்தை பார்வையிட்டு, புரிந்துகொண்டு எந்தவித சந்தேகமுமின்றி தொடர்ந்து தங்களது பதிவுகளை முழுமையாக செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.