தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

60 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய எம்எல்ஏ-க்கள் - mla's

சென்னை: அண்ணா நகர், பெரம்பூர், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் மூன்றாம் கட்டமாக 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய எம்எல்ஏ-க்கள்
60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய எம்எல்ஏ-க்கள்

By

Published : May 30, 2021, 11:40 AM IST

சென்னையிலுள்ள அனைத்து சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் சார்பாகத் தொகுதிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் ஒட்டு மொத்தமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்படும் என்று, மே 24 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, கொளத்தூர் தொகுதி சார்பாக 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கடந்த 26 ஆம் தேதி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து துறைமுகம் தொகுதி சார்பாக சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சார்பாக உதயநிதி, திருவிக நகர் தொகுதி சார்பாக தாயகம் கவி உள்ளிட்டோர் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் மொத்தமாக, 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆணையரிடம் வழங்கினர்‌.
மேலும் நேற்று(மே.29) மயிலாப்பூர், பெரம்பூர், அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது. இதுவரை ஒரு மக்களைவை உறுப்பினர், ஏழு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இணைந்து 160 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’வரி விலக்கு குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசிடம் உரிய பதில் இல்லை’ - பழனிவேல் தியாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details