சென்னை: சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கிய போது ஏற்பட்ட வெள்ளத்தால் சி.பி.சி.எல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவு, எண்ணூர் பாலம் முதல் ரயில்வே பாலம் வரையிலும், பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியிலும் எண்ணெய் படலங்கள் படர்ந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து 'ஆயில் ஸ்கிம்மா்' உள்ளிட்ட எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கச்சா எண்ணெய்யை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 1,49,240 லிட்டர் எண்ணெய் கலந்த நீரிலிருந்து, 405 டன் எண்ணெய் அகற்றப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
சி.பி.சி.எல் ஆலையிலிருந்து எண்ணூர் கடல் முகத்துவாரம் வரையில் உள்ள 11 கி.மீ மட்டுமல்லாமல், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், பழவேற்காடு கடல் முகத்துவாரம், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் மாங்குரோவ் காடுகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.
அலையாத்தி காடுகள்:எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால், கடல் வாழ் உயிரினங்கள், நீர் அருந்த வரும் பறவைகள் மற்றும் மக்கள் மட்டும் பாதிப்படையவில்லை, எண்ணூரில் இருக்கும் அலையாத்திக் காடுகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, துறை சார்ந்த நடவடிக்கையாக, அலையாத்தி காடுகளில் படிந்திருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “எண்ணூரில் கடற்கழி என்பது, சென்னை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சரியாக தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைகளில் உள்ளது. இந்த எண்ணூர் பகுதியானது, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது சிபிசிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்னெய் கழிவுகல் பக்கிங்காம் கால்வாய் மற்றும் எண்ணூர் கடற்பகுதியை மிகுதியாக பாதித்தது.
இதைத் தொடர்ந்து, அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்ய வனத்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை ஆகியவை இனைந்து செயல்பட்டு கடற்பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருக்கும் எண்ணெய் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கடற்பரப்பில் மேல் இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றி உள்ளோம். மேலும் அந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய வளம் அலையாத்தி காடுகள்.
இந்த அலையாத்தி காட்டில் சுமார் 60 ஹெக்டேர் அளவில் எண்ணெய் படலங்களால் நிறைந்துள்ளது. மேலும் இதனை அகற்றுவதற்காகத் தொடர்ந்து, பல நவீன உபகரணங்களான," Hydrojets & Water Sprayers" ஆகியவை கொண்டு அலையாத்தி காடுகளைச் சுத்தம் செய்யும் பணிகள் செய்து வருகிறோம். மேலும் இந்த பணியில், தொடர்ந்து, 24 படகுகளைக் கொண்டு, 125 நபர்களை வைத்து, நவீன இயந்திரங்களில் மூலம் நாங்கள் செய்து முதற்கட்டமாகச் செய்து வந்தோம். ஆனாலும் எங்களால் முழுமையாக, அதனை அப்புறப்படுத்துவதில் சிக்கல் இருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பணியில், எண்ணெய் படிந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி வருகிறோம். அதன் பிறகு, அலையாத்தி காடுகள் சதுப்பு மணல்களைத் தொடர்ந்து அகற்றி வருகிறோம். 20 நாட்களாகத் தொடர்ந்து எண்ணெய் அகற்றும் பணியைச் செய்து வருகிறோம். குறிப்பாக, காட்டுப்பாக்கம் பகுதி, எண்ணூர் பாலம், பத்துகன்னு பாலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இந்த பணிகளானது நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 100 படகுகள் மற்றும் 450 ஊழியர்களை வைத்து சுத்தம் செய்து, 1250மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் கழிவுகளை அகற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் இருக்கும் அலையாத்தி காடுகள் பல்லுயிர்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க:பி.சண்முகத்திற்கு 'அம்பேத்கர் விருது', சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது' - தமிழக அரசு அறிவிப்பு