சென்னையில் செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார், வேன், லோடு ஆட்டோ என 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து தகவலறிந்து விரைந்த வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இவ்விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகார் - விசாகா குழுவை அமைத்தது அரசு