தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 6 பேருக்கு வலை வீச்சு - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

கத்தியை காட்டி மிரட்டி பயிற்சி மாணவர்களிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருமாறு கூறி வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

6 person involved threatened and robb from trainee students in chennai
6 person involved threatened and robb from trainee students in chennai

By

Published : Jan 21, 2021, 1:54 PM IST

தேனி மாவட்டம் ஓடப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகேஸ்வரன்(17), கோவில்பட்டியை சேர்ந்த அனிஸ்(17), திருநெல்வேலியை சேர்ந்த அத்திப்(17) ஆகிய மூவரும் கேட்டரிங் படித்துவிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி தி.நகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பயிற்சி மாணவர்களாக உள்ளனர்.

நேற்று அதிகாலை மூவரும் விடுதிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆறு பேர் கத்தியை காட்டி மிரட்டி ஏடிஎம் அழைத்து சென்று 22 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தரச்சொல்லி பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பிடுங்கி சென்றுள்ளனர்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details