தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரையில் கஞ்சா புகைத்த கல்லூரி மாணவர் உட்பட 6 நபர் கைது! - கடற்கரையில் கஞ்சா புகைத்த கல்லூரி மாணவர்

சென்னை: திருவொற்றியூரில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 நபர்களிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

smoking marijuana
6 நபர் கைது

By

Published : Dec 3, 2019, 10:40 PM IST

சென்னையில் திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரையில் ஒரு கும்பல் கஞ்சா புகைப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த ஆகாஷ்(23), கல்லூரி மாணவர் தாமோதரன்(23), வெங்கடேச பெருமாள், பிரின்சு, ரூபியாமேரி, ஜெனி (25) ஆகிய 6 நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் பெங்களூரிலிருந்து கஞ்சா வாங்கியது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகித்த காரை சோதனை செய்த போது 30 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"

ABOUT THE AUTHOR

...view details