சென்னை: மெரினா கடற்கரை கைலாசபுரம் சுடுகாடு நுழைவு வாயில் அருகே, ஒரு கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான, தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 18ஆம் தேதி இரவு, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் பரந்தாமனின் (30) பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது.