தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு! - 6 new positive cases in TN

6 new positive cases of Covid19 in TN,
6 new positive cases of Covid19 in TN,

By

Published : Mar 27, 2020, 12:17 PM IST

Updated : Mar 27, 2020, 12:59 PM IST

12:12 March 27

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இதனை தேசிய சுகாதாரத் திட்டம் தமிழ்நாடு பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது

அந்தப் பதிவில், மதுரையில் கரோனாவால் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்தவரின் உறவினர்கள் இருவர், தமிழ்நாட்டில் ஐந்தாவது, ஆறாவதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவர், சென்னையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவருடன் தொடர்புடைய ஒருவர், 25 வயதுடைய சென்னையச் சேர்ந்த பெண் ஆகிய ஆறு பேருக்கு கரோனா பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த சென்னை இளம்பெண்ணுக்கு அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மொத்தமாக தமிழ்நாட்டில் 35 பேருக்கு கரோனா பாதிப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணமில்லை -எம்.பி. செந்தில்குமார் குற்றச்சாட்டு!

Last Updated : Mar 27, 2020, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details