தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்! - சென்னை

சென்னையில் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரவு 10 மணி முதல் 12 மணி வரை இயங்கும் 6 மின்சார ரயில்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்

By

Published : Jun 10, 2022, 5:49 PM IST

சென்னை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் வருகிற 11,12,14 மற்றும் 15ஆம் தேதிகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஜூன் 10) வெள்ளிக்கிழமை, நாளை (ஜூன் 11) சனிக்கிழமை மற்றும் ஜூன் 13, 14ஆம் தேதிகளில் இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து அதே 4 நாட்களில் இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன’ என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருப்பதியில் விக்கி- நயன் சுவாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details