தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து

சென்னை: தமிழ்நாட்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

வேல்முருகன்

By

Published : Sep 17, 2019, 8:49 PM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் வேல்முருகன், "மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டுவந்து கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த கருத்துக்கேட்பு கூட்டங்களும், குளிரூட்டப்பட்ட அறையில் குறிப்பிட்டவர்களை மட்டும் வைத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநில அரசும் இதை நடைமுறைப்படுத்த முன்வராத நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் மாணவர்களின் கல்வியை பறித்து இடைநிற்றல்களை அதிகரிக்கும். அவ்வாறு இடைநிற்றல்கள் அதிகரித்தால் மாணவர்கள் அவர்களின் தந்தை பார்க்கும் வேலையையே மேற்கொள்ளக்கூடும். குறிப்பாக, இந்த புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்வி திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி பிஞ்சு குழந்தைகள் தங்கள் இளம் வயதில் நுழைவுத்தேர்வுகளை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள். எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அவர்களே நீங்கள் மீண்டும் தேர்தல் என்று தெருவில் இறங்கி மக்களிடம் செல்ல வேண்டும் என்றால், இந்த நுழைவுத்தேர்வுத் திட்டங்களை கைவிடுங்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கிறேன். அப்படி இல்லையென்றால் அனைத்து தரப்பு மாணவர்களையும் திரட்டி அனைத்து அமைச்சர்களையும் முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:

'ஒரே சாதி என்று மட்டும் மோடி சொல்ல மாட்டார்..!' - வேல்முருகன் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details