மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், தமிழ்நாட்டிலுள்ள 119 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 811 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 53 பேருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 864 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்து ஆயிரத்து 919 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 978 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில ஐந்தாயிரத்து 295 நபர்கள் குணமடைந்த இன்று வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 97 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னை - 98,767
செங்கல்பட்டு -14,197
திருவள்ளூர் - 13,481
மதுரை- 10838
காஞ்சிபுரம் - 8604
விருதுநகர் - 7502
தூத்துக்குடி - 6812
திருவண்ணாமலை - 6010
வேலூர் - 5677
திருநெல்வேலி - 5002
தேனி - 4729
ராணிப்பேட்டை -4769
கன்னியாகுமரி - 4523
கோயம்புத்தூர் - 4647
திருச்சிராப்பள்ளி- 4011
கள்ளக்குறிச்சி - 3726