தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35,000ஐத் தாண்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனை சரி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு சிறப்பு ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் கொண்டு வரப்படுகிறது.
ஆக்சிஜன் தாங்கி வந்தடைந்த சிறப்பு ரயில்கள்
அந்த வகையில், ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் இருந்து புறப்பட்ட ஒன்பதாவது ஆக்ஸிஜன் ரயில், நேற்று (மே.19) இரவு 8 மணிக்கு தண்டையார்பேட்டை கண்டெய்னர் முனையத்திற்கு வந்தடைந்தது. இதில் 36.74 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் எடுத்து வரப்பட்டது.
பத்தாவது ரயில் ரூர்கேலாவில் இருந்து கோவை மாவட்டம், மதுக்கரைக்கு இன்று (மே.20) பிற்பகல் 1.55 மணிக்கு வந்து சேர்ந்தது. 29.24 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மூன்று கண்டெய்னர்களில் அந்த ரயில் சுமந்து வந்தது.
11ஆவது சிறப்பு ஆக்ஸிஜன் ரயில், ரூர்கேலாவில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை கண்டெய்னர் நிலையத்திற்கு இன்று அதிகாலையில் 78.58 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் வந்தடைந்தது.
வரவுள்ள சிறப்பு ரயில்கள்